spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னை அடையாறில் போதை மாத்திரை - இளைஞர் கைது

சென்னை அடையாறில் போதை மாத்திரை – இளைஞர் கைது

-

- Advertisement -

சென்னை அடையாறு திருவிக பாலம் அருகே 1500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் சிக்கினார். அபிராமபுரம் போலீஸ் விசாரணை.

நேற்று அடையாறு திருவிக பாலம் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவரது பையில் மறைத்து வைத்திருந்த மாத்திரைகள் குறித்து விசாரணை செய்தபோது தனது சொந்த பயன்பாட்டிற்கு வைத்திருப்பதாக தெரிவித்தார்.

we-r-hiring

சோதனையில் 1500 மாத்திரைகள் சிக்கின இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர் சாலைகளில் உள்ள பப்களில் இளைஞர்களுக்கு இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. பிடிப்பட்ட இளைஞர் ஆழ்வார்பேட்டை பீமன்னா கார்டன் பகுதியை சேர்ந்த கோகுல் என்கிற மதன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ