Homeசெய்திகள்சினிமாஆக்ஷன் திரில்லர் ஸ்பை படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

ஆக்ஷன் திரில்லர் ஸ்பை படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

‘ஸ்பை’ எனும் திரைப்படத்தை தெலுங்கு திரை உலகின் முன்னணி தொகுப்பாளரும் இயக்குனருமான கேரி பி ஹெச் என்பவர் இயக்கியுள்ளார்.

we-r-hiring

இப்படத்தில் கார்த்திகேயா 2 படத்தின் கதாநாயகன் நிகில் சித்தார்த் நடித்துள்ளார். இவருடன் ஐஸ்வர்யா மேனன், ஆரியன் ராஜேஷ்,மகரந்த் டேஷ் பாண்டே, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா,
சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை Ed என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விஷால் சந்திரசேகர் இதற்கு இசை அமைத்துள்ளார்.ஸ்ரீ சரண் பகாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் கதையை கே ராஜசேகர் ரெட்டி எழுதியுள்ளார்.

இது இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட ரகசியங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஒரு ஆக்சன் திரில்லர் படமாகும்.
இப்படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

MUST READ