விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சங்கீதா, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். பிப்ரவரி 26ஆம் தேதி முதன்முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு, பின்னர் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்தபோது இருதரப்பும் கூடுதல் நேரம் கோரியதால், நீதிபதி வழக்கை ஜூன் மாதத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

தேர்தல் பணிகள் காரணமாக நேரில் ஆஜராக முடியாது என விஜய் தரப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், விவாகரத்துக்கு விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் விஜய் காணொலி வாயிலாக ஆஜராக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல், சங்கீதாவும் காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இருவரும் நேரில் ஆஜராகாத நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், 2021ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவாகரத்து வழக்கு, திரைத்துறையிலும் அரசியல் வட்டாரங்களிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது.
அதிமுகவிற்கு செலுத்தும் வாக்கு, பாஜகவிற்கு அளிக்கும் வாக்காகும் – நடிகர் பிரகாஷ்ராஜ்
