
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர். திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரண் ஜோகர், ரன்வீர் சிங் கூட்டணியின் புதிய படம்… அசத்தலான ரொமான்டிக் ட்ரைலர் வெளியானது!
இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்பில், கல்வி தகுதியாக தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனுபவமும், தகுதியும் வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் தங்களது உரிய சான்றிதழ்களுடன் சுய விவரப் படிவத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு வரும் ஜூன் 30- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகுதி வாய்ந்த நபர்கள் 90 நாட்களுக்கு உட்பட்டு தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியின் புதிய படத்தில் இணைந்த ‘துணிவு’ நடிகை!
இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ள மதுரை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் சு.வெங்கடேசன், “தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படப் பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.