spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!

பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!

-

- Advertisement -

 

we-r-hiring

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 26) வெளியிடப்படவுள்ளது.

செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!

2023- 24 ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் சேர்க்கை மாணவர் கலந்தாய்விற்கு கடந்த மே மாதம் 5- ஆம் தேதி முதல் ஜூன் 4- ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த கலந்தாய்விற்கு 1,87,693 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் எனப்படும், சம வாய்ப்பு எண், கடந்த ஜூன் 6- ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி இன்று (ஜூன் 26) வெளியிடுகிறார்.

அரசுப் பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து- ஐந்து பேர் உயிரிழப்பு!

கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களின் தரவரிசை தயார் செய்யப்படும். நடப்பாண்டில், மாணவ, மாணவிகள் கணினி பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ