
அரிசிக்கொம்பன் யானையின் உடல்நலம் குறித்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வனத்துறைக் கூடுதல் தலைமை அரசு செயலாளர் சுப்ரியா சாகு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை நோட்டீஸ்!
அரிசிக்கொம்பன் யானையின் உடல்நலம் குறித்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், காட்டு யானை ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், புதிய வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக வனத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளார்.
அரிசிக்கொம்பனுக்கு அருகில் மற்ற யானைக் கூட்டங்கள் உள்ளது சுவாரஸ்யமானது என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே சண்முகநதியின் அணை பகுதியில் முகாமிட்டிருந்த அரிசிக்கொம்பன் காட்டு யானை கடந்த ஜூன் 5- ஆம் தேதி அன்று அதிகாலை சின்ன ஓவலாபுரம் பகுதியில் விளை நிலத்தில் நின்றுக் கொண்டிருந்த நிலையில், வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது.
பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!
இதையடுத்து, நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வனப்பகுதிக்குள் யானை விடப்பட்டது. அதைத் தொடர்ந்து யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, தமிழக வனத்துறை சார்பில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.