தமிழகம் முழுவதும் நிதிப் பரிவர்த்தனை அறிக்கையை முறையாக தாக்கல் செய்யாத வங்கிகள், சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அரசுப் பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து- ஐந்து பேர் உயிரிழப்பு!
பெரிய அளவில் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடும் தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுறவு வங்கி, சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவைகளும் வருமான வரித்துறைக்கு ‘SFT’ எனப்படும், நிதி பரிவர்த்தனை அறிக்கையை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனை சமர்ப்பிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை அனுப்பி வைக்கும். அந்த வகையில், இந்தாண்டு தமிழகம் முழுவதும் 10,000 வழக்குகளைப் பதிவு செய்து இருப்பதாக வருமான வரித்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேலாக செலுத்தப்படும் கணக்குகள், சார் பதிவாளர் அலுவலகங்களில் 30 லட்சம் ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு அறிக்கைச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!
இவற்றில் முதலீடு செய்த தனிநபரின் வருமான வரித்துறைக் கணக்குத் தாக்குதலை ஒப்பீட்டு பார்த்து, அதில் முரண்பாடு இருப்பின், அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும். அந்த வகையில், தற்போது 10,000- க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.