திருவனந்தபுரம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து இடுக்கி மாவட்டம் குட்டிக்கணம் பகுதிக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டது. இந்த பகுதியில் பேருந்து போகும் பொழுது அதிவேகமாக சென்றதனால், வளைவு திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து, அந்த பேருந்து சாலையின் ஒரு புறத்தில் கவிழ்ந்தது. இதில் 10 முதல் 40 போ் இருந்தனா். இந்த பேருந்தில் இருந்த 40 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டதால், குட்டிக்கணம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அங்கிருந்தவா்கள் சோ்த்தனா்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், விரைந்த வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பேருந்து வேகமாக வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த பகுதிக்கு இந்த குடிக்கணத்தில் இருந்து முண்டகனி வரைக்கும் இறங்க கூடிய இறக்கமான பகுதியில் எல்லோரும் செல்லக்கூடிய வாகனங்கள் குறிப்பாக, ஐயப்ப பக்தர்கள் வாகனம் மிக கவனமா செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கிட்டதட்ட 400 மற்றும் 500 அடி பள்ளத்தாக்குகள் உள்ளதால், இந்த வழியாக வரும் வர ஐயப்ப பக்தர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவுடன் எங்களை ஒப்பிடக் கூடாது – நயினார் நாகேந்திரன் ஆவேசம்



