அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததனால் அதிமுக–பாஜக கூட்டணிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக தலைவி நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
த.வெ.கவில் செங்கோட்டையன் இணைந்ததால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை என நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளாா். செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்ததில் அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அது கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனக் கூறினாா்.

செங்கோட்டையன் பாஜகவை நம்பி இருந்ததாக சிலர் கூறுவது ஏற்புடையதல்ல என்றாா். அ.தி.முகவில் இருந்த காலத்தில் பாஜகவை செங்கோட்டையன் நம்பி இருந்ததாக கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என நயினார் கேள்ளவி எழுப்பினாா்.
மேலும், செங்கோட்டையனை பாஜக இயக்கவதாக கூறுவதும் தவறு. அப்படி இயக்கி இருந்தால் அவர் ஏன் தவெகவில் சேறவேண்டும். பாஜக மிகப்பெரிய கட்சி. ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவுடன் எங்களை ஒப்பிடக் கூடாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.


