‘ஸ்வீட் காரம் காஃபி‘ என்ற வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூத்த நடிகை லட்சுமி, மதுபாலா மற்றும் சாந்தி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த இணைய தொடரை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் ஆகிய மூவரும் இயக்கியுள்ளனர்.
லயன் டூத் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ரேஷ்மா கட்டலா தயாரித்துள்ளார்.

இந்த வெப் சீரிஸ் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களின் வாழ்க்கையை சுற்றி நடப்பது குறித்தும் அவர்கள் தொடங்கும் புது பயணங்களை குறித்தும் பேசக்கூடிய ஒரு முழு நீள தொடராகும்.
மேலும் இது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான பிணைப்புகளை எடுத்துக்காட்டும் தொடராக உருவாகியுள்ளது.
இந்த ஸ்வீட் காரம் காஃபி வெப் சீரிஸ் 8 எபிசோடுகளை கொண்டுள்ளது.
மேலும் இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற ஜூலை 6-ம் தேதி அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
