
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (ஜூலை 04) கட்சியின் மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம், நாராயணன் திருப்பதி மற்றும் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில், 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகைக் குறித்தும், தமிழக அரசியல் சூழல், அண்ணாமலையின் நடைபயணம் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்
கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களைச் சந்திக்கும் அண்ணாமலை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


