- Advertisement -

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மருத்துவத்துறை உயர்த்தியுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு இதற்கு முன்னதாக 13,000 ரூபாயாக இருந்த வருடாந்திர கட்டணம், தற்போது 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பி.டி.எஸ். படிப்பிற்கான கட்டணம் 11,000 ரூபாயில் இருந்து 16,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதைத் தவிர, டிஎம், எம்டிஹெச் உள்ளிட்டப் படிப்புகளுக்கான கட்டணம் 20,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ உயர்படிப்புகளைப் பொறுத்த வரையில் சிறப்புக் கட்டணம் ரூபாய் 10,000 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.