spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகிரெடிட் கார்டுடை வைத்து மோசடி செய்த வங்கி ஊழியர் கைது

கிரெடிட் கார்டுடை வைத்து மோசடி செய்த வங்கி ஊழியர் கைது

-

- Advertisement -

சென்னையில் வங்கி வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்று வங்கி கடன் வாங்கி மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.  

சென்னையில் வங்கி வாடிக்கையாளரின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்று வங்கி கடன் வாங்கி மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.  
எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்

சென்னை சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் தென்னரசு, சாலிகிராமத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் இவர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி இருப்பதாகவும், அதன் மூலம் ரூபாய் 1.50 லட்சம் வங்கியில் கடன் பெற்றிருப்பது போன்றும் அதை செலுத்த வேண்டும் என வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. தன்னிடம் கிரெடிட் கார்டு இல்லாத நிலையில் தன் பெயரில் வங்கிக் கடன் பெற்று இருப்பதாக அந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த தென்னரசு வங்கியில் சென்று முறையிட்டுள்ளார். இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் அவர் புகார் கொடுத்தார்.

we-r-hiring
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி இருப்பதாகவும், அதன் மூலம் ரூபாய் 1.50 லட்சம் வங்கியில் கடன்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தியதில் கிரெடிட் கார்டு பெற்ற கணக்கிற்கு கொடுத்திருந்த வேறொரு செல்போன் எண்ணை வைத்து தேடத் தொடங்கினர். அதன் மூலம், சைதாப்பேட்டை விஜிபி சாலையைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்ற நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை பார்த்து வருவதும், இதற்கு முன்பு ஐ.சிஐ.சி.ஐ வங்கியில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. அந்த நபர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் பணிபுரிந்து வந்த போது, தனக்கு கிடைத்த சிம்கார்டு ஒன்றை வைத்து வங்கியில் கணக்கு வைத்திருந்த தென்னரசு என்பவரின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்று அதன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் கடன் மோசடி செய்ததும், இதே போல் மேலும் சில வங்கி வாடிக்கையாளர் பெயரில் கிரெடிட் கார்டு பெற்று பண மோசடி செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு பெற்று அதன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் கடன் மோசடி
ஐ.சிஐ.சி.ஐ வங்கி-கிரெடிட் கார்டு

இதையடுத்து தற்போது எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வரும் அபூபக்கர் சித்திக் மீது பண மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதேபோன்று இன்னும் எத்தனை வாடிக்கையாளர்களின் பெயரில் கிரெடிட் கார்டு மோசடி செய்துள்ளார் என்பது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ