spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

-

- Advertisement -

ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறித்திவைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடிதை தவறாக பேசியதாக, பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

we-r-hiring

ராகுல்காந்தி

இந்நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது, அதில் தலையிடமுடியாது என தெரிவித்தார். மேலும், ராகுல்காந்தி மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார். ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, ராகுலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

 

MUST READ