spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாராகுல் காந்தி வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ராகுல் காந்தி வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

-

- Advertisement -

 

ராகுல் காந்தி

we-r-hiring

ராகுல் காந்திக்கு எதிராக 10 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!

ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கூறிய முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம். வரம்புக்குள் வராத காரணங்களைச் சுட்டிக்காட்டித் தண்டனையை நிறுத்தி வைக்க ராகுல் காந்தி கோருகிறார். அதனை ஏற்க முடியாது. ஒரு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைப்பது என்பது விதிவிலக்கு தானே தவிர கட்டாய விதி கிடையாது.

வழக்கின் தீர்ப்பிற்கு பிறகும், ராகுல் காந்தி அவதூறாகப் பேசினார் என ஏராளமான வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டிருக்கின்றனர் குறிப்பாக, வீர் சாவக்கரின் பேரன் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

“விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்”- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

ராகுல் காந்திக்கு எதிராக இதேபோன்று 10 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அரசியலில் தூய்மை வேண்டும். இந்த வழக்கின் தண்டனையை நிறுத்தி வைப்பது என்பது ராகுல் காந்திக்கு அநீதி எதையும் ஏற்படுத்தாது. செசன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானது; சரியானது; சட்டப்பூர்வமானது. தண்டனையை நிறுத்தி வைக்க சரியான, நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. இவ்வாறு குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ