spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்"- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

“விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்”- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

"விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்"- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
File Photoமுதலமைச்சர் 

‘மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 07) பிற்பகல் 03.00 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

we-r-hiring

ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மகளிருக்கான உரிமைத்தொகைத் திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்’ என அழைக்கப்படும். வரும் செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில் மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூபாய் 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“ஜூலை 14- ஆம் தேதி சந்திராயன்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்”- இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு 1.50 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பயனாளர்களுக்கு உதவித்தொகைக் கிடைப்பதை உறுதிச் செய்ய வேண்டும். சிறப்பு முகாம்களை ஏற்படுத்திக் கூட்ட நெரிசலை தடுக்க வேண்டும். தமிழகத்தில் இதுபோன்ற மாபெரும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

MUST READ