spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"ஜூலை 14- ஆம் தேதி சந்திராயன்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்"- இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

“ஜூலை 14- ஆம் தேதி சந்திராயன்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்”- இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ஜூலை 14- ஆம் தேதி சந்திராயன்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்"- இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
Photo: ISRO

எல்விஎம்3- எம்4 (LVM3- M3) ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலத்தை வரும் ஜூலை 14- ஆம் தேதி அன்று மதியம் 02.35 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் (SriHarikota) உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre) இருந்து ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

we-r-hiring

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

சந்திராயன்- 3 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட்டில், அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன.

சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் ஏவுவதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நேரில் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சந்திராயன் -3 திட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் விண்வெளித்துறையில் இந்தியா தனக்கென்று தனி முத்திரையைப் பதிக்கும் என்றால் மிகையாகாது.

டி.ஐ.ஜி. தற்கொலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கடந்த 2008- ஆம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலத்தையும், கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை 22- ஆம் தேதி சந்திராயன்- 2 விண்கலத்தையும் இஸ்ரோ விண்ணில் ஏவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ