spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயோகிபாபு கூட முதல்முறை நடிக்கப் போறேன்… சட்னி சாம்பார் சீரிஸ் பற்றி வாணி போஜன்!

யோகிபாபு கூட முதல்முறை நடிக்கப் போறேன்… சட்னி சாம்பார் சீரிஸ் பற்றி வாணி போஜன்!

-

- Advertisement -

தமிழில் சிறந்த கதைக்களங்கள் கொண்ட படங்களைக் கொடுத்து வருபவர் இயக்குனர் ராதா மோகன்.கடைசியாக அவர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் பொம்மை படத்தை இயக்கினார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

தற்போது ராதா மோகன், சட்னி சாம்பார் என்ற புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார். இந்த சீரிஸ் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் இந்த சீரிஸ் தொடங்கியது.

we-r-hiring

யோகி பாபு மற்றும் வாணி போஜன் ஆகியோர் இந்த சீரிஸில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்திரமௌலி, இளங்கோ மற்றும் நிதின் சத்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் இந்த சீரிஸை தயாரிக்கிறார். அஜேஷ் இசையமைக்கிறார்.

வாணி போஜன், இந்த சீரிஸ் பற்றி பேசும் போது “சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இரசித்துப்பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக “சட்னி சாம்பார்” இருக்கும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதல்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ