விஜயின் 69 ஆவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தை நடித்து முடித்துள்ளார். லியோ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவுடைந்து வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதைத் தொடர்ந்து விஜய் தனது 68 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். லியோ ரிலீஸுக்கு பிறகு இதன் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் விஜயின் 69 ஆவது படத்தை தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ இயக்கப் போகிறார் என்று ஏற்கனவே பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
ஆனால் தற்போது விஜயின் 69 வது படத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தின் இயக்குனர் ஆர் டி நீசன் இயக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த அறிவிப்பு வெளியானால்தான் தளபதி 69 படத்தை யார் இயக்குவது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.