spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல்

கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல்

-

- Advertisement -

கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல்

கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர்கள் சண்டையிடுவதை தட்டிக்கேட்ட லட்சுமிபுரத்தை சேர்ந்த மாணவனை வீடு புகுந்து சக மாணவர்கள் 10 பேர் தாக்கியுள்ளனர். காயமடைந்த மாணவன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

attack

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவரது மகன் ஹரிபிரசாத்(17). இவர் பட்டியலின வகுப்பினை சேர்ந்தவர்.‌ கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

we-r-hiring

இந்நிலையி, அதே பள்ளியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகுரு (17), ஷேமந்த் குமார் (17) ஆகியோர் 11ம் வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளிக்கு வெளியே ராஜகுரு, ஹேமந்த் குமார் இருவரும் வெளியே சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மாணவர் ஹரி பிரசாத் இருவரும் சண்டை போடுவதை தடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜகுரு 10 பேரை அழைத்துக்கொண்டு இரவில் லெட்சுமிபுரம் சென்று ஹரி பிரசாத்தை ஜாதி ரீதியாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஹரி பிரசாத் காயம் அடைந்தார். காயம் அடைந்த ஹரிபிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

MUST READ