விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த படத்தை ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு விஜய் லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாகியுள்ளது. அதன்படி சமீபத்தில் வெளியான விஜய் ஃபர்ஸ்ட் லுக், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனின் கிளிம்ஸ், நான் ரெடி பாடல் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். அதுமட்டுமில்லாமல் இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் மலேசியாவில் வருகின்ற அக்டோபர் 5ம் தேதி நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.