spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

பிரபல நடிகர் சித்தார்த் டக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சித்தார்த், ‘சித்தா‘ என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர் சித்தார்த்தே தயாரித்துள்ளார். இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய S.U. அருண்குமார் இயக்கியுள்ளார்.திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

we-r-hiring

பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் சித்தார்த் நடித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ