spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினிக்கு வில்லனாகும் ஃபகத் பாசில்!

ரஜினிக்கு வில்லனாகும் ஃபகத் பாசில்!

-

- Advertisement -

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ரஜினி தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை ஜெய் பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்க உள்ளார். அனிருத் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
இந்த படம் சம்பந்தமான பல தகவல்கள் சமீப காலமாக அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

we-r-hiring

அதன்படி இந்த படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும் சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தில் பகத் பாஸில், மஞ்சு வாரியர், சர்வானந்த் உள்ளிட்ட ஒரு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினி இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் பரவி வருகிறது. இருந்தபோதிலும் படம் சம்பந்தமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் பகத் பாசில் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான பஹத் பாசில் தமிழில் பல படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் பகத் பாஸில் வில்லனாக நடித்திருந்த மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

MUST READ