spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவேளாங்கண்ணி திருவிழா- சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழா- சிறப்பு பேருந்துகள் இயக்கம்

-

- Advertisement -

வேளாங்கண்ணி திருவிழா- சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாங்கண்ணி புணித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா 2023-ஐ முன்னிட்டு 28.08.2023 முதல்‌ 09.09.2023 வரை சென்னை, திண்டுக்கல்‌, மதுரை திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர்‌, கும்பகோணம்‌, பூண்டி மாதாகோவில்‌, ஒரியூர்‌, சிதம்பரம்‌, புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர்‌, நாகப்பட்டிணம்‌, நாகூர்‌ காரைக்கால்‌ ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கும்‌ அதே போன்று மேற்கண்ட ஊர்களிலிருந்து வரும்‌ பக்தர்கள்‌ திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்தும்‌ 28.08.2023. முதல்‌ 09.09.2023 வரை இரவு,பகல்‌ எந்நேரமும்‌ சிறப்புப்‌ பேருந்துகள்‌ தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்‌ கும்பகோணம்லிட்‌ கும்பகோணம்‌ சார்பாக இயக்கப்பட உள்ளது.

we-r-hiring

மேலும்‌ மேற்படி அனைத்து ஊர்களின்‌ பேருந்து நிலையங்களிலும்‌, வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும்‌ பயணிகள்‌ வசதிக்காக சேவைமையங்கள்‌ இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில்‌ சிறப்பு அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர்‌. எனவே இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள்‌ பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய்‌ அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ