சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை சார்பில் அவசர காலங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தும் பணிகள் உள்ளிட்ட நான்கு திட்டங்களை துவக்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் மொத்தம் நான்கு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. அதில் முதலாவதாக காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் 23 கோடியே 72 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு இருக்கக்கூடிய மூன்று காவல் நிலையங்கள், இரண்டு காவல்துறை கட்டிடங்கள், இரண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இரண்டாவதாக, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் புத்தொழில் நிறுவனங்களுக்கான கையேட்டினை வெளியிட்டு ஆதார மானிய நிதியினை முதலமைச்சர் வழங்கினார்.
பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படக்கூடிய “ஸ்டார்ட் அப்” நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை கையேட்டினை வெளியிட்டார்.
25 நிறுவனங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 1.25 கோடி ரூபாய் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஆதார மானிய நிதியாக முதலமைச்சர் வழங்கினார். தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி மென்பொருள் களத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மூன்றாவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான டெய்லிகளையும் தொடங்கி வைத்தார். தனியார் பள்ளிகளை தொடங்குதல் தொடர அங்கீகாரம் உள்ளிட்ட அரசுடைய பல்வேறு அனுமதிகளை பெறக்கூடிய வகையில் இந்த இணையமானது வடிவமைக்கப்பட இருக்கின்றது. அதனுடைய செயல்பாடுகள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
நான்காவதாக மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்குக்காக அவசர காலங்களில் குறிப்பாக மீன் பிடிக்க செல்லும்போது ஆழ் கடலில் இருக்கும் போது அவர்களை தொடர்பு கொள்ள பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றார்கள். இந்த காலநிலை மாற்றம் அதேபோல புயல் ஆகியவை வரும்போது உடனடியாக மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தக்கூடிய பணியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்களை தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்ள நீல புரட்சி திட்டத்தின் கீழ் 18.01 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் உள்ள 4997 மீன்பிடி விசை படகுகளில் இந்த டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தினை முதலமைச்சர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 10 விசைப்படகு உரிமையாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் முதலமைச்சர் இந்த டிரான்ஸ்பாண்டர்களை நேரடியாக வழங்கினார்.


