spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவாகன விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தலைமை செயலாளர் இறை அன்பு

வாகன விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தலைமை செயலாளர் இறை அன்பு

-

- Advertisement -

வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை தலைமை செயலாளர் இறை அன்பு ஐஏஎஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

we-r-hiring

இன்று காலை நேப்பியர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவரை ஆட்டோ இடித்து சென்றது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபருக்கு கால் முற்றிலும் முறிந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

அந்த வழியாக வந்த தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவரது வாகனத்தை விட்டு இறங்கி உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்து அடிப்பட்ட நபரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அடிப்பட்ட நபர் வேளச்சேரியை சேர்ந்த குமரேசன்(34) என்பதும் இவர் பணி நிமித்தமாக பூக்கடை சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானார் என்பதும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

MUST READ