spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

சனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

-

- Advertisement -

 

"கோயில்களில் அறங்காவலராக அரசியல்வாதியை நியமிப்பதை நிறுத்துங்கள்"- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Photo: Chennai High Court

சனாதனம் என்பது இந்துக்கள் தேசத்திற்காக, பெற்றோருக்காக செய்ய வேண்டிய கடமைகளின் தொகுப்பு என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி கருத்துத் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி!

திருவாரூரில் சனாதனம் தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி, “சனாதன தர்மம் என்பது இந்து மத வாழ்க்கை முறையில் விதிக்கப்பட்ட காலவரையற்று நிலைத்திருக்கும் கடமைகளின் தொகுப்பு; தேசத்திற்கான, மக்களுக்கான கடமை, குருக்களுக்கு செய்ய வேண்டிய கடமை, ஏழைகள் மீதான அக்கரை போன்றவை இதில் அடங்கும்.

இந்தக் கடமைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டுமா?, சனாதன தர்மம் என்பது சாதிவெறியையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பது மட்டுமே எனக் கருதப்படுகிறது. சனாதன கொள்கைகளுக்குள் எங்காவது தீண்டாமை அனுமதிக்கப்பட்டதாகக் காணப்பட்டால், ஜனநாயக நாட்டில் அதைச் சகித்துக் கொள்ள முடியாது.

“சீமான் கூறிவிட்டார்….பெங்களூருக்கு செல்கிறேன்…. சென்னைக்கு வரமாட்டேன்”- நடிகை விஜயலட்சுமி பேட்டி!

தீணடாமைக் கொடுமையை ஒழிக்க மாணவர்களை கல்லூரி நிர்வாகம் ஊக்குவிக்கலாம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிறரைக் காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

MUST READ