
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.

சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி!
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை விஜயலட்சுமி, “யாருடைய வற்புறுத்தலிலும் புகாரை வாபஸ் பெறவில்லை; சீமானிடம் பேசிவிட்டே வாபஸ் பெற்றேன். காவல்துறை 20 முறை சம்மன் அனுப்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது என சீமான் கூறிவிட்டார். சொல்ல முடியாத அதிகமான கொடுமைகள் நடந்ததால் புகாரை வாபஸ் பெற்று விட்டு பெங்களூரு செல்கிறேன்.
“வழக்குகள் தொடர்ந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
கடந்த சில நாட்களாக வீரலட்சுமி ஒரு வழியில் செல்கிறார்; என்னை ஒரு வழியில் எடுத்துச் செல்கிறார். கடந்த இரண்டு வாரமாக வீட்டுக் காவலில் இருந்தது போல் இருந்தேன்; செல்போன் கூட இல்லை. இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவு திருப்தி இல்லை; இனி சென்னை வரப்போவதும் இல்லை. சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது; அது ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.