
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு மானியாக 300 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 2.25 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், 33,000 ரேஷன் கடைகளை நடத்துகின்றன. நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளிலிருந்து இந்த ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இந்த ரேஷன் கடைகளின் வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது. ஒவ்வொடு ஆண்டும் ரூ. 450 கோடி ரூபாயை மானியமாக கூட்டுறவுத்துறைக்கு வழங்கி வருகிறது.

இது மாவட்ட கூட்டுறவு வங்கிகள் வாயிலாக ரேஷன் கடைகளை நடத்தும் ஒவ்வொரு சங்கங்களுக்கும் வழங்கப்படுகிறது. அதன்படி, 2025 – 2026 ம் நிதியாண்டுக்கு மானிய முன்பணமாக 300.கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த தொகையை மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிக்க வேண்டும் என்று மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.