spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெங்கட் பிரபு, சினேகா நடிப்பில் உருவாகியுள்ள 'ஷாட் பூட் த்ரி'.... ட்ரைலர் வெளியீடு!

வெங்கட் பிரபு, சினேகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஷாட் பூட் த்ரி’…. ட்ரைலர் வெளியீடு!

-

- Advertisement -

ஷாட் பூட் த்ரி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு கடைசியாக கஸ்டடி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதன் பிறகு விஜயின் நடிப்பில் தளபதி 68 திரைப்படத்தை இயக்க உள்ளார். இவர் படம் இயக்குவது மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஷாட் பூட் த்ரி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஏற்கனவே சினேகா வெங்கட் பிரபுவின் கோவா திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது வெங்கட் பிரபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

we-r-hiring

மேலும் ஷாட் பூட் த்ரி படத்தில் யோகி பாபு, பிரணிதி, கைலாஷ் ஹீட், பூவை யார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தை இயக்கிய அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ராஜேஷ் வைத்யா இதற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

MUST READ