கிருத்தி செட்டியுடன் நடிக்க மறுத்த காரணத்தை விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி தற்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருகிறார். அதன்படி தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார்.

இதற்கிடையில் விஜய் சேதுபதிக்கு தமிழில் புதிய படம் ஒன்றில் கிருத்தி செட்டியுடன் நடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதனை விஜய் சேதுபதி மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் செய்தியாளர்களினால் விஜய் சேதுபதியுடன் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது விஜய் சேதுபதி, ” கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான உப்பெணா திரைப்படத்தில் நான் நடித்திருந்தேன். அதில் கிரித்தி செட்டிக்கு தந்தையாக நடித்திருந்தேன். கிருத்தி செட்டி எனக்கு மகளைப் போன்றவர். அதனால் அவருடன் ரொமான்டிக்காக என்னால் நடிக்க முடியாது. அதனால்தான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.