spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசித்தார்த்தின் 'சித்தா' பட டிரைலர் ரிலீஸ் அப்டேட்!

சித்தார்த்தின் ‘சித்தா’ பட டிரைலர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

சித்தா படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சித்தார்த் நடிப்பில் சித்தா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் சித்தப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்துள்ளார். எட்டாகி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இசையிலும் பாலாஜி சுப்பிரமணியன் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், அதைத் தொடர்ந்து வெளியான டீசர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இதன் ட்ரெய்லரை நாளை இரவு 7 மணி அளவில் நடிகர் சூர்யா வெளியிட இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.

MUST READ