spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமாவளவனிடம் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் நலம் விசாரிப்பு

திருமாவளவனிடம் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் நலம் விசாரிப்பு

-

- Advertisement -

திருமாவளவனிடம் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் நலம் விசாரிப்பு

காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.சி.க. தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

மதுவிலக்கிற்கு போராடினால் இ.பி.எஸ்ஸுடன் இணையத் தயார் - திருமாவளவன் எம்.பி |  nakkheeran

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி காய்ச்சல் காரணமாக நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிகிறது. இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல் காரணமாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரும் 20 ஆம் தேதிவரை தன்னை சந்திக்க வர வேண்டாம் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

we-r-hiring

Thol. Thirumavalavan on X: "#VCK extends its hearty greetings to DMK Prez  Thalapathy @mkstalin who is set to be sworn in as Chief Minister & to  all the ministers in his cabinet.

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல் திருமாவளவனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

MUST READ