spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'குழந்தைகள் கட்டாயமாக இந்த படத்தை பார்க்க வேண்டும்'..... சித்தா படம் குறித்து கமல்!

‘குழந்தைகள் கட்டாயமாக இந்த படத்தை பார்க்க வேண்டும்’….. சித்தா படம் குறித்து கமல்!

-

- Advertisement -

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. எஸ் யு அருண்குமார் எழுதியுள்ள இந்த படத்தை எட்டாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சித்தார்த்துடன் இணைந்து நிஷா சஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அண்ணன், அண்ணி, மகள், சித்தப்பா என்று வாழ்ந்து வரும் ஒரு அழகிய குடும்பத்தில் அண்ணன் இறந்து விடவே குடும்பத்தை தாங்கும் பொறுப்பு சித்தப்பாவான சித்தார்த்துக்கு உண்டாகிறது.

ஒரு கட்டத்தில் அண்ணன் மகள் காணாமல் போக, அவரை காப்பாற்ற நடிகர் சித்தார்த் பல முயற்சிகளை மேற்கொள்கிறார். இறுதியில் அண்ணன் மகளை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே இதன் மீதி கதையாகும். குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்முறை குறித்த கதைக்களத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. நேற்று வெளியான திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் சித்தா படம் குறித்து பாராட்டியுள்ளார்.

we-r-hiring

“நான் சித்தா படத்தை பார்த்தேன் குழந்தைகளுக்கு என்னதான் அம்மா சொல்லிக் கொடுத்தாலும் அவர்களின் மனதில் பதிய வேண்டும் என்றால் கதை தான் சொல்ல வேண்டும். இதில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் இறுதியில் ஒரு அழுத்தத்துடன் வெளியே வராமல், இப்படி எல்லாம் நடக்கிறது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள். ஆண் குழந்தை பெண் குழந்தை என்று பார்க்காமல் குழந்தைகளை குழந்தைகளாகவே பார்க்க வேண்டும். இந்த படத்தின் இயக்குனரை முக்கியமாக பாராட்டியாக வேண்டும் விபத்தை விவரிக்கும் போதே மூளை எப்படி சிதறியது தெரியுமா என்று விவரிப்பார்கள் அப்படியெல்லாம் இல்லாமல் ஒரு கொலையை கேமராவை காட்டாமல் முதல் தகவல் அறிக்கையை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார். இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பு நிறுவனத்தையும் பாராட்டியாக வேண்டும். இந்த படத்தோட இன்ஸ்பிரேஷன் மகாநதி அப்படின்னா அதைவிட எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த படம் கலக்சன்ல வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. குழந்தைகளை இந்த படத்திற்கு அழைத்துச் செல்லலாமா என்று யோசிக்க வேண்டாம் கட்டாயம் குழந்தைகள் இந்த படத்தை பார்க்க வேண்டும்” என்று சித்தா படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

MUST READ