
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர், பிரபல சமூக வலைத்தளமான யூடியூப் பக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபல திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

எப்பா லோகேஷு சும்மா செதுக்கி வச்சுருக்கியே🔥… ரிலீஸ் ஆனது லியோ ட்ரைலர்!
அனிருத் இசையமைத்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 19- ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “லியோ திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்” ட்ரைலரை வெளியிட்டுள்ளார். ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், அதனை உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது- ரோகிணி திரையரங்கு முன்பு குவிந்த ரசிகர்கள்!
அந்த வகையில், அரசியல் பரபரப்புகளுக்கு இடையே பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான வானதி சீனிவாசன், தனது இல்லத்தில் லியோ திரைப்படத்தின் ட்ரைலரைக் கண்டு ரசித்தார். இது குறித்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.