
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நடிகர் நாசரின் தந்தை காலமானார்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 7வது போட்டி, தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று (அக்.10) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 364 ரன்களைக் குவித்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக, டேவிட் மாலன் 140 ரன்களையும், ஜோ ரூட் 82 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோ 52 ரன்களையும் எடுத்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..
பின்னர் ஆடிய வங்கதேசம் அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேசம் அணி தரப்பில் லிட்டன் தாஸ் 76 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹீம் 51 ரன்களையும், ஹ்ரிதாய் 39 ரன்களை எடுத்தனர்.