Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகர் நாசரின் தந்தை காலமானார்!

நடிகர் நாசரின் தந்தை காலமானார்!

-

- Advertisement -

 

நடிகர் நாசரின் தந்தை காலமானார்!
File Photo

நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா (வயது 95), உடல்நலக்குறைவால் இல்லத்தில் காலமானார்.

we-r-hiring

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..

தமிழ் சினிமாவில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திரம், தந்தை, காமெடி என பல்வேறு வேடங்களில் 100- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நாசர். இவர் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதேபோல், திரைப்படத் தயாரிப்பாளராகவும் உள்ளார். குறிப்பாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா, செங்கல்பட்டு மாவட்டம், தட்டான்மலையில் வசித்து வந்த நிலையில், உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று (அக்.10) காலமானார்.

மகளிர் உரிமைத் தொகை குறித்து அ.தி.மு.க. எழுப்பிய கேள்வி…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடிகர் நாசரின் தந்தை மறைவுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

MUST READ