spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..

-

- Advertisement -

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். அந்த இரு முறையும் ( ஜூன் 16, செப்.20) ஜாமீன் மனுக்களை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

we-r-hiring

ஏற்கனவே கைது நடவடிக்கையின் போதே நெஞ்சுவலி ஏற்பட்டு , செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் , தற்போது அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் உடல்நலக்குறைவை சுட்டிக்காட்டியுள்ளார். அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் நேற்றும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேற்றைய தினம் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில், சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவது சிரமமாக உள்ளதாகவும், ஆகையால் ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஜாமீன் மனுவை நாளை
விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

MUST READ