
இந்தியர்களை மீட்பதற்காக இஸ்ரேலின் டெல் அவிவ்க்கு இன்று (அக்.12) இரவு சிறப்பு விமானம் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இருதரப்பிலும் சுமார் 2,200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
அந்த வகையில், இஸ்ரேல் நாட்டில் 18,000 இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர், “இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு இன்று (அக்.12) இரவு சிறப்பு விமானம் இந்தியாவில் இருந்து புறப்படுகிறது. முதற்கட்டமாக, 230 இந்தியர்களுடன் நாளை (அக்.13) தாயகம் திரும்புகிறது சிறப்பு விமானம். இஸ்ரேலில் உள்ள 18,000 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஹமாஸ் மீதான இஸ்ரேல் தாக்குதலில் கேரளவைச் சேர்ந்த பெண் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.


