- Advertisement -
கொடைக்கானலில் நடைபெறும் மண்ணாங்கட்டி படப்பிடிப்புக்கு நடிகை நயன்தாரா பங்கேற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, யோகி பாபு கூட்டணியில் கோலமாவு கோகிலா திரைப்படம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து ஐரா திரைப்படத்திலும் யோகி பாபு நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் நயன்தாரா மற்றும் யோகி பாபு கூட்டணியில் மண்ணாங்கட்டி எனும் திரைப்படம் உருவாக உள்ளது. இதனை பிரெண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை டியூட் விக்கி இயக்குகிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.



