இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சிறந்த பந்துவீச்சாளர். அவர் தனது வாழ்நாளில் 800-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 800 என்ற பெயரில் அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவானது.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தான் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது. அதற்கான போஸ்டர் மற்றும் அவரின் தோற்றம் உள்ளிட்டவை வெளியாகின. ஆனால் இலங்கைப் போரில் தமிழர் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்ற முத்தையாவின் வாழ்க்கைப் படத்தில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதா? என்ற வகையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால், விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல் என்பவர் முத்தையாவாக நடித்திருந்தார். படத்தில் மஹிமா நம்பியார் நாயகியாக நடித்திருந்தார்
இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.