Homeசெய்திகள்சினிமாஇனிமேல் மன்சூர் அலிகானுடன் நடிக்கவே மாட்டேன்.... நடிகை திரிஷா கண்டனம்!

இனிமேல் மன்சூர் அலிகானுடன் நடிக்கவே மாட்டேன்…. நடிகை திரிஷா கண்டனம்!

-

- Advertisement -

நடிகை திரிஷா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் திரிஷா நடிப்பில் தி ரோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து வெளியான லியோ திரைப்படத்திலும் திரிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் மற்றும் திரிஷாவுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

we-r-hiring

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாக பேசியிருந்தார். அவரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் மன்சூர் அலிகானை வறுத்தெடுக்கின்றனர்.

நடிகை திரிஷாவும் மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில், “சமீபத்தில் திரு. மன்சூர் அலிகான் என்னைப்பற்றி கேவலமாக பேசிய வீடியோ என் கவனத்திற்கு வந்தது. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மேலும் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு போன்ற மோசமான செயல்களை குறிக்கிறது. அவர் ஆசைப்படலாம். ஆனால் நான் இனிமேல் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ