நடிகர் கார்த்தி விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு பெரிய அளவில் தரவில்லை. அதனால் இந்த படத்தில் இழந்த வெற்றியை தனது அடுத்தடுத்த படங்களில் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி தனது 26 வது படத்தை நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
அதே சமயம் விஜய் சேதுபதி ,திரிஷா கூட்டணியில் வெளியான 96 படத்தின் மூலம் பிரபலமான பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 27 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இதன் புதிய அப்டேட் என்னவென்றால், கார்த்தி 27 திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமான சுவாதி கொண்டே நடித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
சுவாதி கொண்டே ஏற்கனவே கன்னட படங்களில் நடித்தவர். அதன் பிறகு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 தொடரின் மூலம் சின்னத்திரையிலும் பணியாற்றி வந்தார். சமீபத்தில் சுவாதி கொண்டே வெளியிட்ட பதிவினால் அவர் சீரியலில் இருந்து விலகுகிறாரா? என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. இந்நிலையில் கார்த்திக் 27 படத்தில் அவர் இணைந்துள்ள தகவல் சுவாதி கொண்டே ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.