spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறாரா அமீர்?..... வெற்றிமாறனின் வாடிவாசல் அப்டேட்!

சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறாரா அமீர்?….. வெற்றிமாறனின் வாடிவாசல் அப்டேட்!

-

- Advertisement -

சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறாரா அமீர்?..... வெற்றிமாறனின் வாடிவாசல் அப்டேட்!நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சூர்யாவிற்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார்.

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி வரும் விடுதலை இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனை முடித்த பின்பு சூர்யாவின் வாடிவாசல் படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறாரா அமீர்?..... வெற்றிமாறனின் வாடிவாசல் அப்டேட்!

we-r-hiring

நடிகர் சூர்யா வாடிவாசல் படத்திற்காக காளைகளை அடக்கும் பயிற்சியை மேற்கொண்டார். மேலும் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு சோதனையும் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது. அது மட்டும் இல்லாமல் ரோபோ காளை ஒன்றை தயார் செய்யும் பணிகள் லண்டனில் நடைபெற்று வருவதாகவும் வெற்றிமாறன் சில தினங்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தார். எனவே வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முழு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறாரா அமீர்?..... வெற்றிமாறனின் வாடிவாசல் அப்டேட்!

இதற்கிடையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிரபல இயக்குனர் அமீர், வாடிவாசல் படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அமீரை சந்தித்து இது சம்பந்தமாக பேசியிருக்கிறார். நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் அம்புலி, பிச்சி என அப்பா மற்றும் மகன் ஆகிய இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், அதில் பிச்சி என்பவருக்கு மச்சானாக அமீர் நடிக்க இருப்பதாகவும் அமீரிடம் வெற்றிமாறன் கூறி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமீரின் கதாபாத்திரத்தை எழுதும் போது எழுத எழுத அந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் அதிகமாகி கொண்டே போனதாகவும் கூறியிருக்கிறாராம். எனவே வாடிவாசல் திரைப்படத்தில் அமீரின் கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரமாக கூட இருக்கலாம் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ