பெரும்பாலான பெண்கள் முக அழகை அதிகரிப்பதற்காக செயற்கை அழகு சாதன பொருட்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். அதேசமயம் அதனால் பல பக்க விளைவுகளையும் சந்திக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த செயற்கை அழகு சாதன பொருட்கள் பளபளப்பை கொடுத்தாலும் விரைவில் வயதான தோற்றத்தை கொடுத்து விடும். இது போன்றவைகளை தடுக்க இயற்கையான முறையில் ஃபேஷியல் செய்வது நல்லது. இதனால் முகத்திற்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது.
தற்போது நான்கு வழிகளில் ஃபேஷியல் செய்யலாம். அவற்றில் ஏதேனும் ஒரு வழிகளை பின்பற்றி முகத்தின் அழகை இயற்கையாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

1. மாம்பழ ஃபேஷியல்
தோல் சீவிய மாம்பழத்தை எடுத்து, அதனை நன்கு மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிதளவு பால் சேர்த்து ஃபேஷியல் செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும்.
2. ஸ்ட்ராபெரி ஃபேஷியல்
ஸ்ட்ராபெரி பழத்தை மசித்து தயிருடன் கலந்து ஃபேஷியல் செய்து வந்தால் முகப்பருக்கள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.
3. வாழைப்பழ ஃபேஷியல்
வாழைப் பழத்தினை நன்கு மசித்து அதனுடன் தயிர் மற்றும் தேன் கலந்து ஃபேஷியல் செய்து வந்தால் முதுமை தோற்றம் நீங்கி முகம் பொலிவு பெறும்.
4. காய்கறி ஃபேஷியல்
கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் பயத்தம் பருப்பு சேர்த்து நன்றாக கலந்து ஃபேஷியல் செய்துவர முகத்தில் உள்ள பருக்கள், மேடு பள்ளங்கள் சரியாகும். மேலும் முகத்தின் நிறமும் அதிகரிக்கும்.
இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை எனில் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.