- Advertisement -
கேம் சேஞ்சர் படம் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருப்பதற்கு, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.


ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. நீண்ட ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தென்னாப்பிரிக்கா, லண்டன், ஐதராபாத் என அடுத்தடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர், காஜல் அகர்வால் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனிடையே தெலுங்கு திரையுலகின் இளம் நாயகன் ராம்சரணை வைத்தும் ஷங்கர் இயக்கி வருகிறார். கேம் சேஞ்சர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில், எஸ்ஜே சூர்யா, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.



