spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுயல் பாதிப்பு- பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!

புயல் பாதிப்பு- பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!

-

- Advertisement -

 

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

‘மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை’- இரவு, பகலாக மீட்புப் பணி!

இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புயலால் பாதித்தவர்களுக்கு உதவ அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர். இயல்பு நிலை திரும்பும் வரைக்கு தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நிவாரணப் பணிகள் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“பால் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

இதனிடையே, புயல், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ