spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெள்ளத்தில் கலந்த கெமிக்கலால் மக்கள் படும் அவதி....விஜய் மக்கள் இயக்கத்தினரின் நெகிழ்ச்சி செயல்!

வெள்ளத்தில் கலந்த கெமிக்கலால் மக்கள் படும் அவதி….விஜய் மக்கள் இயக்கத்தினரின் நெகிழ்ச்சி செயல்!

-

- Advertisement -

வெள்ளத்தில் கலந்த கெமிக்கலால் மக்கள் படும் அவதி....விஜய் மக்கள் இயக்கத்தினரின் நெகிழ்ச்சி செயல்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு வருகிறது. பொதுமக்கள் பலரும் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் திரைப்பட பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அதுபோல சமீபத்தில் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பொதுமக்களுக்கு உதவும் படி விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள் செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு உணவு வழங்கியும், வெள்ளத்தில் சிக்கி மீள முடியாமல் இருப்பவர்களை படத்தின் மூலம் மீட்டும் வருகின்றனர்.வெள்ளத்தில் கலந்த கெமிக்கலால் மக்கள் படும் அவதி....விஜய் மக்கள் இயக்கத்தினரின் நெகிழ்ச்சி செயல்!

இந்நிலையில் சென்னையின் புறநகரான எண்ணூர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கெமிக்கல் நிறைந்து காணப்படுகிறது. தண்ணீர் முழுவதும் கருப்பு நிறமாக காட்சியளிக்கிறது. அங்கு வசிக்கும் மக்களுக்கு யாருமே உதவ முன் வரவில்லை. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர் அந்தப் பகுதிக்கு சென்று மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். இது குறித்த வீடியோவை விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

we-r-hiring

எண்ணூரில் துறைமுகம் இருக்கின்ற காரணத்தால் அங்கு எண்ணெய் குழாய் பதிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து எண்ணெய் கலந்த கெமிக்கல் வெளியேறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் கன மழையால் வெள்ளம் ஏற்பட்டதனால் அந்தக் கெமிக்கல் வெள்ளத்தில் கலந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

MUST READ