spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவாழ்க்கை எப்போதும் ஒரு மாயவலை தான்....அமீரின் மாயவலை பட டீசர் வெளியீடு!

வாழ்க்கை எப்போதும் ஒரு மாயவலை தான்….அமீரின் மாயவலை பட டீசர் வெளியீடு!

-

- Advertisement -

வாழ்க்கை எப்போதும் ஒரு மாயவலை தான்....அமீரின் மாயவலை பட டீசர் வெளியீடு!பிரபல இயக்குனரான அமீர் மௌனம் பேசியதே பருத்திவீரன், ராம், போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். அதே சமயம் அமீர் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். யுத்தம் செய், வடசென்னை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2009 இல் அமீர் கதாநாயகனாக நடித்து வெளியான யோகி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் அமீர் மாயவலை என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்க, அமீரும் வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் அமீருடன் இணைந்து ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா செட்டி, சரண், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரின் மூலம் இந்த படம் திரில்லர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் வாழ்க்கை எப்போதும் ஒரு மாயவனை என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்த டீசரை இறுதியில் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ