- Advertisement -
தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அண்மையில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த ‘ஜவான்’ திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமன்றி, சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். பல நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். அண்மையில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தில் பொருட்களை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
